Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பன்னங்கண்டி மயானப் பகுதியில் அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வால் பொதுமக்களின் பயிர் செய்கை காணிகள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், பொதுமயானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக பன்னங்கண்டி பொது மயானத்தில் சடலங்கள் எரியூட்டுவதற்கான பகுதி மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதாவது மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் சடலங்களையும் மனித எச்சங்களையும் தோண்டி எடுத்து விட்டு மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு இடம்பெற்று வரும் மணல் அகழ்வுகள், கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் சில அதிகாரிகளின் துணையுடன் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக பன்னங்கண்டி, கல்லாறு, கண்டாவளை ஆகிய பகுதிகளில் அகழ்வு செய்யப்படும் சட்டவிரோத மணல் கனரக வாகனங்களில் பூங்காவனச்சந்தி பரந்தன் சந்தியூடாக ஏ-35 வீதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி, தட்டுவன்கொட்டிப் பகுதியிலுள்ள பயிர்ச் செய்கை காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்டபோதும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025