2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அதிகாலையில் திருடிய சிறுவன் சிக்கினான்

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. மகா

யாழ்ப்பாணம், மந்திகை பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தை  உடைத்து திருடிய 15 வயது சிறுவனை, நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருடிய போது, குறித்த சிறுவன், கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

இந்த அலைபேசி விற்பனை நிலையம், கடந்த சில காலமாக உடைக்கப்பட்டு திருட்டுகள் இட்பெற்று வந்த நிலையில், பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் , சிறுவனை கைது செய்துள்ளனர்.

சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, திருடப்பட்ட பல அலைபேசிகளை கைப்பற்றிய  பொலிஸார், தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X