2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அதிபர்களின் உருவச்சிலைகள் திறந்துவைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரிக்கு சேவையாற்றிய முன்னாள் அதிபர்களான வணபிதா சி.ஏ. சிமித், ஏ.ஈ. தம்பர் ஆகியோரது உருவச்சிலைகள் கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (03) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன.

கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த பழைய மாணவன் ஆர்.சாந்தகுணநாதன்  திருவுருவச்சிலையினை திரைநீக்கம் செய்து வைத்தார். இச் சிலை அமைப்பதற்குரிய நிதியுதவியினையும் அவரே வழங்கியிருந்தார்.

அதிபர் சிமித் அவர்கள் 1945  தொடக்கம் 1955ஆம் ஆண்டுகள் வரையில் அதிபராக இருந்தவர். அதிபர் ஏ.ஈ.தம்பர் கல்லூரியில் மாணவராக கற்று ஆசிரியராக பணியாற்றி 1962 தொடக்கம் 1964 ஆம் ஆண்டுகள் வரை அதிபராக இருந்தவர்.  இவர்கள் இருவரது காலத்திலும், கல்லூரியின் விளையாட்டு மற்றும் கல்வி வளர்ச்சிப்போக்கில் இருந்தது.

பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X