2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’அதிக விலைகளில் பொருள்களை விற்றால் முறையிடவும்’

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்டச் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிடம் முறையிடுமாறு, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், இன்று (14) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்ற போதும், இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லையென்றார்.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றின் விலைகளைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், எனவே அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட வியாபாரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

எனவே, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்கள் அதிக விலையில் விற்கப்பட்டால், அது உடனடியாக யாழ். மாவட்டச் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தொலைபேசி இலக்கமான 021 222 5000 என்ற இலக்கத்துக்கு உடனடியாக தகவலைத் தர முடியுமென, க.மகேசன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X