Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை அதிபர் மீது இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்க முடியவில்லையென, மேற்படி குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்திய சுயாதீன விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் மீது, இலங்கை ஆசிரியர் சங்கம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், நிதி மோசடி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஆளுநரிடம் முறையிட்டிருந்தது.
இதனடிப்படையில், ஆளுநரால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதற்கமைய, தரம் 1ல் மாணவர்களை உள்ளீர்ப்பு செய்தபோது 15 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியபோதும் அதற்கான பற்றுச்சீட்டு வழங்காமை, நிதி வைப்பிலிடப்படாமை தொடர்பாக ஆராய்ந்த மேற்படி விசாரணை குழு, பற்றுச்சீட்டுடன் பெறப்பட்ட பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், பற்றுச்சீட்டு வழங்காத மாணவர்களிடம் பொருள்களாக வழங்கப்பட்டுள்ளமையும் அறியப்பட்டு, ஆவணங்கள் ஊடாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 2017ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்பின்போது, 1 இலட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டு, அந்தப் பணம் அதிபரிடம் கொடுக்கப்பட்டு, அந்தப் பணம் வைப்பிலிடப்படாமை தொடரபாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்த விசாரணை குழு, அந்தப் பணத்தில், பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டு, இருப்பு பதிவேட்டிலும் அது பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், திருநெல்வேலியைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், தொலைக்காட்சி பெட்டி, மடிகணினி, பல்லூடக ஒளிப்படக்கருவி ஆகியவற்றை பாடசாலைக்கு வழங்கியபோதும், அவை பொருட்பதிவு ஏட்டில் பதியப்படவில்லை என்பதுடன் பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த விசாரணை குழு, குறித்த பொருள்கள் தற்காலிக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியதுடன், குழு பொருள்களை வழங்கியவர் தாம் பொருள்களை வழங்கியதற்கான கடிதத்தை கொடுக்காமையால் நிரந்தர பதிவேட்டில் பதியப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
4ஆவது முறைப்பாடாக, 2018ஆம் ஆண்டு நடனவிழா ஒன்றில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் காசோலை வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அது 20 ஆயிரம் பெறுமதியான காசோலை எனவும் அந்தக் காசோலை இலங்கை வங்கியில் 14.06.2018ஆம் திகதி வைப்பிலிடப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் புத்தக அச்சிடலில் ஏற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, பாடசாலை சுற்றாடலை தூய்மையாக்க இரு தொழிலாளர்களுக்கு பணம் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
36 minute ago