Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பாடசாலை அதிபர் உட்பட எந்தவோர் அதிபரும் கைது செய்யப்படவில்லையென, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில், மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு, பணம் கோரியக் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டதாக, நேற்று (18) மாலை செய்திகள் வௌியாகின.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை, அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலை உட்பட சில பாடசாலைகளில், மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக, அப்பாடசாலைகளின் அதிபர்கள் பணம் கோரியதாக, பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டன.
இதற்கமைய, இது குறித்துப் பாடசாலை அதிபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, ஆனால் அதிபர்கள் எவரும் நேற்று (18) கைது செய்யப்படவில்லையெனவும் கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .