Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 26 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
'மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் விரைவாக குடியேறவேண்டும். குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உட்பட அனைத்து அடிப்டை வசதிகளும் அரசினால் வழங்கப்படும்' என்று யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வலி வடக்கு காங்கேசன்துறையில் 201.3 ஏக்கர் காணி சனிக்கிழமை (25) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'விடுவிக்கப்பட்ட இந்நிலத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறும் வாய்ப்பு உள்ளது. முன்னர் விடுவிக்கபட்ட காணிகள் வெறுமனே உள்ளதாக இராணுவ தளபதி கூட்டங்களில் கூறுகிறார். ஆகவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் விரைவாக குடியேறுங்கள்' என்று அவர் கூறினார்.
'மேலும், குறித்த பகுதியில் இயங்கிய அரச திணைக்களங்களும் குறித்த இடங்களில் மீளவும் இயங்குவதற்கு பின்நிற்கின்றன. திணைக்களங்கள் தமது செயற்பாட்டை மீள்குடியேற்றப் பகுதியில் ஆரம்பித்தால் தான் நாம் அத்திணைக்களங்கள் ஊடாக மீள்குடியமர்வு மக்களுக்கு பல உதவிகளை முன்னெடுக்கமுடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'முகாம்களில் உள்ள கிட்டத்தட்ட 971 குடும்பங்களில் 600 குடும்பங்கள் காணியின்றி உள்ளனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் முகாம்களில் உள்ள காணியற்றவர்கள் தேர்ந்தெடுக்கபடும் காணிகளில் குடியமர்த்தபடுவர் மேலும் இடம்பெயர்ந்து உறவினர்களுடனும், வாடகைக்கும் குடியிருக்கும் மக்களது காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .