2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அனுமதிபத்திரம் இன்றி கலட்டை பிடித்த மீனவர்கள் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அனுமதியின்றி, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில் கடலட்டை பிடித்த ஒன்பது வெளிமாவட்ட மீனவர்களை சனிக்கிழமை (15) காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

சனிக்கிழமை மாலை, கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் கடலில் நின்ற படகுகளை சோதனை செய்தனர். இதன் போது அனுமதிபத்திரமின்றி கலட்டை பிடித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதான 9 பேரும் வெளிமாவட்ட மீனவர்கள் என்றும், அவர்கள் முல்லைத்தீவு பகுதியில் தங்கி நின்று மீன்பிடிப்பவர்கள் என்று தெரிவித்தார்.

அத்துடன் சான்று பொருட்கள், கடலட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கைதான அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X