Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) வட பகுதிக்கு செல்லவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவிலும் யாழ். மாவட்டத்தில் யாழ் மாவட்ட செயலகம், காரைநகர், நயினாதீவு ஆகிய இடங்களிலும் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அமைச்சர், மீனவர்களுக்கு 37 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளை வழங்கவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர், இரணைமடு - சாந்தபுரம் மீனவர் ஓய்வு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டு நன்னீர் மீன்பிடி மீனவர்களுக்கான வலைகளை வழங்குவர்.
இதையடுத்து, காலை 10 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் அமைச்சர், குடாநாட்டு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், மீனவர்களுக்கு வலைகளும் வழங்கவுள்ளார்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு நயினாதீவுக்கு சென்று அங்கு 3.2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டுவார்.
மறுநாள் திங்கட்கிழமை (22) காலை காரைநகருக்குச் செல்லும் அமைச்சர், 288 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள படகு கட்டும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago