2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அம்புலன்ஸ் மோதி முதியவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

முழங்காவில் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி மோதியதில் காயங்களுக்குள்ளான முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை (16) வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறை 4ஆம் குறுக்குத் தெருவினை சேர்ந்த பரமசாமி குசேலராஜா என்ற முதியவரே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் காயங்களுக்கு உள்ளான நோயாளர்களை ஏற்றி வந்துகொண்டிருந்த அம்புலன்ஸே, மேற்படி முதியவரை வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X