2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க மருத்துவ முகாமில் 3,000 பேருக்கு சிகிச்சை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பசுபிக் ஏஞ்சல் 2016-3 நிகழ்ச்சி திட்டம் ஊடாக, இலங்கை விமானப்படை மற்றும் அமரிக்க விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், மூவாயிரம் பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக பலாலி விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் எஸ்.டி.ஜீ.எம்.சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'கடந்த 15ஆம் திகதி, இடைக்காடு மகா வித்தியாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ முகாம், தொடர்ந்து ஜந்து நாட்கள் இடம்பெற்றிருந்தது. இந்த ஐந்து நாட்களிலும், யாழ். குடாநாட்டிலிருந்து மூவாயிரம் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவ்வாறானதொரு மருத்துவ முகாமினை நடத்துவது என்பது சாவாலான ஒன்று. இவ்வாறான செயற்பாட்டுக்கு நன்கு திட்டமிட வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் அமரிக்க விமானப்படையில் பல்தேசிய உறுப்பினர்களை கொண்ட குழுவினரை மருத்துவ நடவடிக்கையில் ஈடுபடுத்தக்கூடியதாக இருந்தது.

அமரிக்க விமானப்படையின் குழுவினருடன் சேர்ந்து பணியாற்றிய எங்கள் வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் மற்றும் அனைவரும் உயர்ந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார்கள். அமரிக்க விமானப்படையினரால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துவகைகள் தொடர்ந்தும் எம் மக்கள் மனதில் நினைவுகளுடன் இருக்கும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X