2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, நேற்றுச் சனிக்கிழமை (12) வடமராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து போராட்டத்தினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி கையொழுத்துத் திரட்டும் பணி, வடமராட்சியின் வல்வெட்டித்துறை, நெல்லியடி, மருதங்கேணி, பருத்தித்துறை, குடத்தனைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில்  ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதனைக் காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் வடமராட்சி கிருஸ்தவ மத ஒன்றியத்தின் பொறுப்பாளர் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் செல்வன் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னரும், தடுத்து வைக்கப்பட்டு அரசியல் கைதிகள் எந்தவித விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அன்றாடம் வறுமையில் வாடுகின்றனர். இந்த கையெழுத்து போராட்டம் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவே, நாம் இதனை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் எவரும் கண்டுகொள்ளாமல் உள்ளது பரிதாபமாக உள்ளது. இவ் விடயத்தில் ஜனாதிபதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி, கையெழுத்துடன் சேர்ந்த மகஜர் ஒன்றினை, ஜனாதிபதியிடம் கையளிக்வுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X