2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக மக்கள் கருத்துக்கள்,  ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் குழுவின் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

நல்லாட்சி அரசாங்கம், மக்களுடைய கருத்துக்களை உள்வாங்கி அரசியலமைப்பு மறுசீரமைப்பைச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக உருவாக்கப்பட்ட குழு இலங்கையின் சகல பாகங்களிலும் அமர்வுகளை நடத்தி பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றது. இதற்கமைய, இன்று, யாழில் மக்கள் கருத்துக்களை கேட்கும் அமர்வு, 8 விசாரணையாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாப அணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் சார்ந்தவர்கள் ; மற்றும் பொதுமக்கள் ஆகியோர்; இந்த கருத்துக்களை பெறும் அமர்வில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த அமர்வு தொடர்ந்து இன்றும் இடம்பெறும்.

அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X