2025 மே 17, சனிக்கிழமை

’அரசமைப்பு உருவாக்கத் தடைக்கு தேரர்களே காரணம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

புதிய அரசமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு, மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 1253 உள்வாரி படடதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் இரண்டு தேசியக் கடசிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது. இந்த அரசாங்கத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகஹிந்த ராஜபக்ஷவை திருட்டுத் தனமாக பிரதமராக்கி அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. அதிலும் முக்கியமாக இனப் பிரச்சினைக்கு தீர்வான புதிய அரசமைப்பு பின்னோக்கி நகர்ந்தது. அது மட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன. வேலை வாய்ப்பு, காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதம் ஆகியுள்ளன. இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எபோபோதோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது. எனினும் தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான் எனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .