2025 மே 14, புதன்கிழமை

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து யாழ். மாணவர்களும் போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களால், இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தால், மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகக் கல்லூரிகளையும் மூடுவதற்கு முஸ்தீபு எடுக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களால், இன்று (21) இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை உடனடியாக மீளப் பெற வேண்டுமென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகக் கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயப்படுத்தப்படாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாத்திரம் சீருடையைக் கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .