2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கத்துக்கு எதிராக பேசி தமிழர்களின் அபிவிருத்தித் தடுக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் தற்போது எழுந்திருப்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அரசாங்கத்துக்கு எதிராக தமிழ்த் தலைவர்கள் பேசிப் பேசி தமிழ் மக்களின் அபிவிருத்தியை தடுத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

அத்தடன், முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு தமது சமுதாயத்தை அபிவிருத்தி செய்திருப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு கோரி, வடமராட்சி - கொற்றாவத்தை பகுதியில், நேற்று (21) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .