2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அறுவடை விழா

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன் நெல் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட பிஜி 300 ரக நெல்லின் அறுவடைவிழா இன்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய நெல்லினமான இந்த வெள்ளை நிற நெல், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டதாகும்.

விதை நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலைய பிரதிப் பணிப்பாளர் ப.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலைய மேலதிக பணிப்பாளர் கீர்த்தி சேன மற்றும் இரணைமடு மறுபயிர் ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X