2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அறநெறி வகுப்புக்கள் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தலாம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு  காரணம் ஆலயங்களில் அறநெறி வகுப்புக்கள் குறைவடைந்து செல்வதுதான். இளம் பிள்ளைகளுக்கு அறநெறிக் கருத்துக்களை ஊட்ட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அறநெறி வகுப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என யாழ். மவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயன் தெரிவித்தார்.

அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தின் 99ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (10) அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் பிற்பகல் 3.30க்கு அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தலைவர் இ.நாகேந்திரம் தலைமையில் நடைபெற்றபோது, அந்நிகழ்விலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கோவில்களில் ஏற்படும் பிரச்சினை தீர்ப்பதுதான் இன்று பெரும் சவாலாகவுள்ளது. அவை பொது நோக்கத்துக்காக செயற்படுகின்ற தன்மை குறைவடைந்து செல்கின்றது. நல்ல செயல்களை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வது மன வேதனை தருகின்றது. இவ்வாறு உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகள் சிறிது காலம் வெற்றியளிக்கலாம். ஆனால், நீண்ட காலம் நிலைக்காது.

இன்று பல ஆலயங்களில் பக்தர்கள் குறைவடைந்து, இயந்திரங்கள் மூலம் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. எமது மதம் சுதந்திரத்தைக் கொண்டது. எல்லா ஆலயங்களிலும் அறநெறி வகுப்புக்களை நடத்த வேண்டும். ஆலயங்கள் பெரும்பங்கிலான நிதியை சமூகப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும். இந்து ஆலயங்களில் உள்ள மிருகபலி செயற்பாடு தடை செய்யப்பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்கின்றது. அன்பு தான் உயர்ந்தது. மற்றவர்களையும் அன்பாக மதிக்க வேண்டும்.

நீதியற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுபவர்களாக தான் இன்று பலர் காணப்படுகின்றார்கள். இந்நிலை மாற வேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X