2025 மே 19, திங்கட்கிழமை

அலையில் சிக்கிய மீனவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு தாளையடியைச் சேர்ந்த அருளானந்தம் யோண்சன் அருள்தாஸ்  (ராஜன்) என்பவரே இவ்வாறு நேற்று (23) உயிரிழந்தார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடல் அலை இழுத்து சென்றது. அங்கிருந்தவர்களால் அவர் காப்பாற்றப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X