2025 மே 17, சனிக்கிழமை

’அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்க வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடர்ந்த பின்னர் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டதெனத் தெரிவித்த வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம், அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

மயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் அல்லவெனவும் வசதியான பாரிய வீடுகளில் வாழ்ந்தவர்களெனவும், அவர் கூறினார்.

மயிலிட்டி மீன்பிடிதுறைமுகம் 1ஆம் கட்ட புனரமைப்பின் பின்னர் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி நாங்கள் மயிலிட்டியை விட்டு வெளியேறும்போது, இந்த துறைமுகத்தில் 400 கடற் கலங்களை விட்டு சென்றோம். அத்தனையும் எங்களுக்கு சொந்தமானது. எங்களுக்கு சொந்தமான எங்களுடைய நிலங்களை கேட்டு நாங்கள் போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் இப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அதில் கலந்துகொண்டு, எமது போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தார்.

“அவர் கலந்துகொண்டுவிட்டு சென்ற பின்னர், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பங்களும் உள்ளன. மேலும் எங்களுடைய காணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு தொடர்ந்தோம். வழக்கு தொடரும்வரை அப்படியே இருந்த வீடுகள் வழக்கு தொடர்ந்த பின் இடித்து அழிக்கப்பட்டது.

“ஆகவே, அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே மீள கொடுக்கவேண்டும். வீட்டுதிட்டத்துக்காக இப்போது எமக்கு வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் பணம் போதாது. 30 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது, ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு. மயிலிட்டி மக்கள் புறாக்கூடு போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் அல்ல. பாரிய வீடுகளை கட்டி வாழ்ந்தவர்கள். ஆகவே, எமக்கு வீடுகள் விசாலமாக கட்டிக் கொடுக்கப்படவேண்டும்.

“அதற்கு மேலாக மயிலிட்டியில் வைத்தியசாலை, பாடசாலைகள் உரிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும், மயிலிட்டியில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ள கொமாண்டோ முகாம் அகற்றப்பட வேண்டும். அதனை அகற்றால் 400 குடும்பங்களை அங்கே குடியேற்றலாம். இவற்றை பிரதமர் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .