2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’அஹிம்சை வழியில் பயணித்து இலட்சியங்களை வெல்ல வேண்டும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியில் பயணித்து, தமிழர்கள் தங்கள் இலட்சியங்களை வெல்ல வேண்டுமென, யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

அத்துடன்,  காந்தியின் நினைவலைகள் 150 ஆண்டுகளென்ன, பல நூற்றாண்டுகளானாலும் அழியாது தொடருமெனவும், அவர் கூறினார்.

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் யாழ்ப்பணம் இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய, மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில், இன்று  (02) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X