2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆசிரிய ஆலோசகர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று, மாகாணக் கல்வித் திணைக்களங்களுக்கு முன்பாக புதன்கிழமை(27) முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 53 வருடங்களாக கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய ஆலோசகர்கள் தமக்கென தனியான ஒரு சேவை உருவாக்கப்பட வேண்டும் என பல வழிகளில் கோரி வந்துள்ளனர்.

இதற்கமைய தனியான சேவை உருவாக்கவென 2007இல் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும், 315/2009 வழக்குக்கான மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக் கிடத்தும்  விமலதர்ம எக்கநாயக்க ஆணைக்குழு (2001) இ குமாரசிறி ஆணைக்குழு (2003) இ சிறிவர்த்தன ஆணைக்குழு (2004)இ மகிந்த மடிஹேவா ஆணைக்குழு (2014) ஆகிய நான்கு ஆணைக்குழுக்களின் சிபார்சு கிடைத்தும் இதுவரை தனியான சேவை உருவாக்கப்படாமையைக் கண்டித்தே இக்கவனயீர்பு நடைபெறவுள்ளது.

அதற்கமைய, வடக்கு மாகாணத்துக்கான போராட்டம் 27ஆம் திகதி மருதனார் மடத்திலுள்ள வடமாகாணக் கல்வித்திணைக்களத்துக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

இதில், வடமாகாணத்துக்குட்பட்ட 12 கல்வி வலயங்களையும் சேர்ந்த அனைத்து ஆசிரிய ஆலோசகர்களையும் கலந்து கொள்ளுமாறு வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X