2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடிய மாணவனை சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு

George   / 2016 ஜூன் 24 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில் விடுவித்தார்.

மாணவர்களின் பெற்றோரை மன்றில் அழைத்து அறிவுரை கூறிய நீதவான், கல்வி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா? என அவதானித்து நல்ல அறிவுரைகளை கூறி வளர்க்கவேண்டும் என தெரிவித்தார்.

மட்டுவில் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மாணவன், புதன்கிழமை (22)  திருடியுள்ளார்.

பின்னர் தனது இரு நண்பர்களையும் ஏற்றி எரிபொருள் தீரும் வரை சவாரி செய்துள்ளதுடன் 
இவ்விடயம் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து மூவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X