2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஜனவரி 23 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், நேற்று வெள்ளிக்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளரை காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்புத்  தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆளணி முகாமையாளர், ஊழியர்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டவர் என்பதுடன் ஊழியர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் நிறுவனத்தின் உயர்மட்டத்துடன் அடிக்கடி பேசுபவர் எனவும் எல்லா ஊழியர்களின் விடயத்திலும் அக்கறையோடு செயலாற்றுகின்ற அதிகாரி என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பணி நீக்கம் செய்தமைக்கான காரணத்தை தெரிவிப்பதுடன் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளின் கருத்தை பெற முயன்றபோது, 'நாங்க்ள எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது. கொழும்பிலிருந்து வருகின்ற அதிகாரிகளே கருத்துக் கூற முடியும்' என்றனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 11, 500 ரூபாய் உட்பட இதர படிகளுடன் மொத்தமாக 13,750 ரூபாய் சம்பளம் கிடைப்பதாகவும் வாரத்தில் ஆறு நாட்களும் காலை 7.24 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியாற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மாதத்தில் சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறையே வழங்கப்படுகிறது எனவும் இதனைத் தவிர மேலதிகமாக ஒரு நாள் விடுமுறை  எடுத்தால்; வரவுக்கான கொடுப்பனவு 1,000 ரூபாய் கிடைக்காது எனவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X