Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 ஜூன் 27 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி மற்றும் சுன்னாகம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆடுகள், தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை, ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர், நிலாவரை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர், தனது இரு ஆடுகளும் காணாமல் போயுள்ளதாக, கடந்த சனிக்கிழமையன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
இதன்பின்னர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், நெல்லியடி, கரவெட்டி, கொற்றாவத்தை பகுதிகளைச் சேர்ந்த மூவரையும், திருடிய ஆட்டைக் கொள்வனவு செய்த யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியைச் சேர்ந்த இறைச்சி வியாபாரியையும் கைது செய்தனர்.
மேலும், இந்த ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்திய வான்; ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மதுபானம் அருந்துவதற்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, வீடுகளுக்கு முன்னால் கட்டி வளர்க்கப்படும் ஆடுகளை, இரவு நேரங்களில் திருடுவதை, இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அச்சுவேலி, சுன்னாகம், கோப்பாய் பகுதிகளிலுள்ள ஆடுகளையும் திருடியுள்ளார்கள் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .