2025 மே 02, வெள்ளிக்கிழமை

’ஆடம்பரங்களைத் தவிர்த்து கொண்டாடுவோம்’

Niroshini   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

ஆடம்பரங்களைத் தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நத்தார் விழாவை கொண்டாடுவோமென்று, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வருட நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வழமையாக  எத்தனையோ ஆடம்பரங்களுடனும் எத்தனையோ விதமான  களியாட்டத்துடனும்  நத்தார் விழாவை கொண்டாடுவது தான் வழக்கம் என்றார்.

ஆனால், இவ்வருடம் அப்படியான ஆடம்பரங்களோடு செய்ய முடியாவிட்டாலும், அவற்றிலே தாங்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுவிதமான தேவையில்லாத செலவுகளை, ஆடம்பரங்களைத் தவிர்த்து, அவற்றை இந்த வருடத்தில்  பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி கொண்டாடுமாறு, இறைவன் தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றாரெனவும், அவர் தெரிவித்தார்.

அதாவது, இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு, வாழ்வதற்கு இந்த வருட கிறிஸ்துமஸ் விழா தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாகாகவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் காலத்தில் தங்களுக்கு கொடுக்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் புறக்கணிக்காது, விரும்பிய வகையில் தமது காரியங்களை செய்யா முடியாவிட்டாலும், அவற்றை நம்பிக்கையான மனதோடு பெற்றுக்கொண்டு, இந்த விழாவை கொண்டாடுவோமெனவும், அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X