Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 08 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயங்களில் கடந்த இரண்டு நாட்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார், வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தனர்.
ஆனைக்கோட்டை, உயரப்புரம் உத்துங்க விநாயகர் ஆலயத்தின் உண்டியல் வியாழக்கிழமை (07) இரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
அதுபோல, புதன்கிழமை (06) இரவு ஆனைக்கோட்டை ஞானவைரவர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .