2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆயரிடம் ஆசி பெற்ற அமைச்சர் ரிஷாட்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மன்னார் மறைமாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிவந்தனைக்குரிய ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளையை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று செவ்வாய்க்கிழமை(19) மாலை சந்தித்து, அவருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, சிரேஷ்ட பத்திரிகையாளர் மு.வு. ராஜசிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்துக்கு ஆற்றி வரும் பணிகளை பாராட்டிய மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிவந்தனைக்குரிய ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை,  இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இன்னும் தீவிரம் காட்டி தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மன்னாரில் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோரும்  அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சேவைகளை பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X