2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்களை படமெடுத்த புலனாய்வாளர்கள்

George   / 2016 மார்ச் 08 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர்.

அத்துடன், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இவர்களின் வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாட்டால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X