2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டப் பேரணி

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள், தமது  பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்த இப்பேரணி, முதன்மை வீதி வழி ஊடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.

இதன்போது,பேரணியில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிகச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஜிடம் மனுவொன்றை கையளித்தனர்.

மேற்படி கிராமங்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் தமிழர்களின் வயல் நிலங்கள் பெரும்பான்மையினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இப்பேரணி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரணி நடத்திய மக்கள் 1984ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணி ஆவணங்கள் வைத்திருந்தனர். கையளிக்கப்பட்ட மனு உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X