2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்த இராணுவம்

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஆனைக்கோட்டை, கூழாவடியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை இராணுவ முகாமின் நிரந்தர தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை (11) மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணியை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்த மக்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்தார்.

அலைபேசி ஒன்றில் உரையாடிக்கொண்டு, பிறிதொரு அலைபேசியை மதிலில் வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் அவர் வீடியோ எடுத்தார். சிறிது நேரத்தில் அலைபேசியை மதிலில் நிறுத்தி வைத்து, வீடியோ எடுக்கவிட்டுச் சென்றார்.

மேற்படி பகுதியில் 5 பேருக்குச் சொந்தமான 16 பரப்பு காணியே இவ்வாறு நிலஅளவை செய்ய முயற்சிக்கப்பட்டதுடன், மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் அது கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X