Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடத்திய ஆறுமுகநாவலர் நினைவரங்கம் கடந்த சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஆசியுரையையும் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் சு.பரமேஸ்வரன் வாழ்த்துரையையும் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.லலீசன் தொடக்கவுரையையும் ஆற்றினர்.
யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் ச.முகுந்தன் நினைவுப் பேருரையாற்றினார். யாழ். பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் சொல்லின் செல்வர் செல்வவடிவேல் தலைமையில் பங்கேற்ற பட்டிமண்டபம் இடம்பெற்றது.
தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் நிறைவுரையாற்றினார். விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago