2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ தரன்ஜித்சிங் சந்து - வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X