2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி மீது தனியார் பஸ் நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். ஆலடி சந்தியில் வைத்து குறித்த தாக்குதல் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வசாவிளான் பகுதியில் இருந்து யாழ்.நகர் நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த இ.போ.ச பஸ்ஸை பின்னால் வந்த தனியார் பஸ் ஆலடி சந்தியில் முந்தி சென்று மறித்து, தனியாhர் பஸ் நடத்துனர் இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் சாரதி காயமடைந்துள்ளார்.

அதேவேளை இரண்டு பஸ்களும் போட்டி போட்டு ஓடி வந்தன எனவும், அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே சாரதி தாக்கப்பட்டார் எனவும் பயணிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சாரதிகள் பயணிகளின் உயிர்களை பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனை நிறுத்த உரிய தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X