2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இடமாற்றம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கருத்தரங்கு

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இவ்வருட முற்பகுதியில் புதிதாக இடமாற்றம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு, நேற்று வியாழக்கிழமை (28) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட 8 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற நியமனம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இக்கருத்தரங்கு இடம்பெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.றஞ்சித் மாசிங்க தலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் புதிதாக இடமாற்றம் பெற்று வந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

பொலிஸார் கடமையாற்ற வேண்டிய விதம் பற்றி இதன்போது புதிதாக இடமாற்றம் பெற்று வந்த உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X