2025 மே 17, சனிக்கிழமை

இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி தயார்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ்த் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்திருக்கும் தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் எப்போதும் ஒற்றுமையுடன் அடிப்படை தேவைகளை வென்றெடுக்க போராடி வருகின்றோம். தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழ் தரப்புக்கள் ஒருமித்து மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க ஓர் கொள்கையை வகுக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன. இதனை நாம் எப்போதிலிருந்தோ வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போது கூட தமிழ் மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

தமிழ் தரப்புக்கள் அனைத்தும் உங்கள் கொள்கைகள் உங்கள் கருத்துகளில் விலகாது தமிழ் மக்கள் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து மக்களுக்கு தேவையாக உள்ள அடிப்படை விடயங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு எனது கட்சி தயாராகவே உள்ளது. அதற்கான அழைப்புக்களையும் விடுக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .