2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க முன்வர வேண்டும்

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா முன்வர வேண்டும்'என ஈழ மக்கள்ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது,

'இந்திய அரசானது முல்லைதீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் 300 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய தொழில் பயிற்சிமையமொன்றை அமைக்க முன்வந்துள்ளமை பெரிதும் வரவேற்பிற்குரியதொரு விடயமாகும்.
 

இத்தகைய தொழிற் பயிற்சி மையத்தைஅமைத்துத் தரும் இந்திய அரசாங்கம், எமது தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. இது எமது மக்களின் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை' தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பொருளாதார மற்றும் சமூக ரீதியில் எமது முன்னாள் போராளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில், மேற்படி திட்டத்தின்போது அவர்களுக்கு முதலிடம் வழங்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.

இதனை அவதானத்தில் கொண்டும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X