2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மூலம் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி,  யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (29), ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

வடமாகாண மீனவ கூட்டமைப்பு,  வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் ஊர்வலம், யாழ். இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

'வடக்கு கடற்பரப்பு எல்லை மீறலை உடனே தடுத்து நிறுத்து, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல்வளத்தை அழித்து மீன்பிடிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்து' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X