2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அனலைதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

இந்திய, ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இரு படகுகளில்  வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களை கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X