2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

George   / 2016 ஜூலை 07 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள்  மூன்று விசைப்படகுகளுடன் நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்படையினர் வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

கைதான அனைவரும் தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த மீனவர்கள் என அவர் உறுதிப்படுத்தினார்.

'தலைமன்னாருக்கு மேற்கே 2 படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த 11 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

அத்துடன், நெடுந்தீவுக்கு தெற்கே 1 விசைப்படகுடன் நுழைந்த மீன்பிடித்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என ஊடகபேச்சாளர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X