2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் மூவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (17) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து விசைப்படகொன்றில்  வந்த இம் மீனவர்கள், நெடுந்தீவுக்கு வடக்கு தெற்கே 11 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ். கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகளை யாழ். இந்திய துணைத்தூதரகம் வழங்கியிருந்தது.

பின்னர்  குறித்த மீனவர்களை  ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X