2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா செல்ல முற்பட்ட நால்வர் கைது

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், வி.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜித்தா

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி வெண்புரம் பகுதியில் இருந்து இவர்கள் நேற்றிரவு (02) 11.30 மணியளவில் புறப்பட தயாராக இருந்த போது, கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இந்தியாவுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணம், அல்லைப்பட்டி பகுதிக்கு வருகை தந்து படகில் ஏற முற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துளள்து.

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக தாம் இந்தியாவுக்குச் செல்லும் உட்பட்டதாக, கடற்படையினரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X