Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
க. அகரன் / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்விகற்கும் இலட்சியத்துடன் உருவாக்கபட்ட அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலருமான வி.ஞானசந்திரன் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்று (13) காலை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1961ஆம் ஆண்டு நாடாளுமன்றில் நிறைவேற்றபட்ட சட்டத்தின் பிரகாரம் உருவாக்கபட்டதே அனுராதபுரம் விவேகானந்தா தமிழ்வித்தியாலயம். 1985ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயற்பட்ட நிலையில் 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வால் பாடசாலை மூடப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் முஸ்லீம் அதிபர், ஆசிரியர் குழாமுடன் மீள இயங்கியது. இந்து தமிழ் மாணவர்களின் நலன் காக்க யாருமற்ற நிலையில் சிறிது, சிறிதாக பாடசாலை நிர்வாகத்தால் எமது மாணவர்களிற்கு அநீதிகள் புரியபட்டது. இதனால் 100 வீதம் இந்துக்களாக இருந்த பலர் மதமாற்றத்துக்கு உள்ளாகினார்கள். 1987 முதல் 2000 ஆம் ஆண்டுவரை விவேகானந்தா சபை இயங்காத நிலையில் குறிப்பிட்ட காலபகுதிக்குள் குறித்த பாடசாலையை முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டம் முஸ்லீம் நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டது.
பின்னர் 2000 ஆம் ஆண்டு விவேகானந்தா சபை இயங்க ஆரம்பித்தது. தற்போதுவரை பாடசாலையின் நிர்வாகம் பாடசாலையின் பழைய வரலாறுகளை அழித்து, சபை, மற்றும் கதிரேசன் ஆலயத்துக்கிடையில் தொடர்புகளை துண்டித்து முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது. தற்போதைய நிர்வாகம் வரலாறு தெரியாத இந்து தமிழ் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து விவேகானந்தா சபை மற்றும்; ஆலயத்துடனான தொடர்புகளை துண்டித்துவருகிறது.
இந்து மாணவர்களிற்கும் விவேகானந்தா சபைக்கும் அநீதி ஏற்படும் போது பௌத்த மதகுருக்கள், சிங்கள அறிஞர்கள், அரசியல்வாதிகள் எமக்கு உதவிவருகின்றனர்.
தற்போதுவரை இந்துமத விடுமுறை நாட்களில் பாடசாலை நடாத்தபடுகின்றது. வீபூதி தரிக்க அனுமதி மறுக்கபடுகின்றது. இந்துசமய பிரார்த்தனைகளுக்கு தடை விதிக்கபடுவதுடன், இந்து சமயம் கற்பிப்பதற்கு வகுப்பறை கொடுக்காமல் மரங்களின் கீழேயே நடைபெற்று வருகிறது. விவேகானந்தன் என்ற பெயரில் இருந்த சஞ்சிகையின் பெயர் விவேகி என மாற்றப்பட்டது. விவேகானந்தரின் படம் அகற்றப்பட்டது, இந்துமாணவர்கள் பர்தா அணிவிக்கபட்டார்கள், சிவராத்திரி தினத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. பாடசாலையில் கற்பிக்கும் 11 தமிழ் ஆசிரியர்களும் கதிரேசன் ஆலயத்துக்கு வருவதில்லை. அவர்களிற்கு தடைவிதிக்கபடுவதாக உணர்கின்றோம். இவ்வாறான விடயங்கள் தற்போது பாடசாலையில் நிகழ்ந்து வருகிறது. இது அநீதியான செயற்பாடு.
தற்போது எமது முயற்சியின் விளைவாக வவுனியாவில் இருந்து இந்து அதிபர் ஒருவரை பாடசாலைக்கு நியமித்தோம். எனினும் அவரை பிரதி அதிபராகவே மாகாண கல்விப்பணிப்பாளர் அங்குநியமித்துள்ளார்.
பாடசாலைக்கு இந்து அதிபர் நியமிக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். இது தொடர்பாக ஆளுநர், அரச அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறோம். அத்துடன் எமது பிரச்சினைகளை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு அனைத்து தரப்புகளுக்கும் தெரியபடுத்துகின்றோம் என்று தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago