Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனனின் விளக்கமறியல், வரும் 15ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில், அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன், கடந்த 20ஆம் திகதியன்று, நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டார்.
அவர் அன்றைய தினம் மாலை, பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நேற்று 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், தொடர் விசாரணைகளை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்க அனுமதியளித்தது.
இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அதிபர் சதா நிமலன் நேற்று முற்படுத்தப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மன்றுரைத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, விசாரணைகளைத் தொடர்வதற்கு அவரது விளக்கமறியலை நீடிப்பதற்கு விண்ணப்பம் செய்தது.
வழக்கை விசாரித்த நீதவான், அதிபர் சதா நிமலனின் விளக்கமறியலை வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 May 2025