Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முன்பள்ளி ஆசிரியர்கள், இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்புப் படையணியின் கீழ் சேவையாற்ற முடியாது என்றும் அவர்களை மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் இணைக்குமாறும் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவத்தின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து தலைசிறந்த முன்பள்ளி மாணவர்களை உருவாக்குவதற்கு உதவுமாறு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறியதாவது,
முன்பள்ளிகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சீருடைகளுடன் தான் பல முன்பள்ளிகளுக்குப் பிள்ளைகள் செல்கின்றார்கள். சிவில் பாதுகாப்பு அலுவலகத்தால் ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்டுகின்றது. கட்டாயமாக அந்த ஆசிரியர்கள் நீல நிறச் சேலை தான் அணிந்து செல்லவேண்டும்.
தற்போது வட மாகாண சபையின் கீழ் குறித்த முன்பள்ளிக் கல்வித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, வட மாகாண சபை ஒவ்வொரு ஆசிரியருக்கும் நான்காயிரம் ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இராணுவ மயப்படுத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர் சேவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனை இக்கூட்டத்தில் தீர்மானமாக எடுப்போம் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியதாவது,
குறித்த விடயம் வட மாகாணக் கல்வி அமைச்சரால் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியால் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் இராணுவத்தினருடைய சிவில் பாதுகாப்பு அலுவலத்தை சேர்ந்த எந்தவொரு ஆசிரியரும் முன்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாது. அந்த ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.
வெளியேறிய ஆசிரியர்கள், மாகாண ஆசிரியர்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து குறித்த தகவலை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட இணைத்தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த தகவல் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago