2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இராணுவத்துக்கு 1000 ஏக்கர் காணி வேண்டுமாம்

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணியை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதியளிக்குமாறு வடமாகாண காணி ஆணையாளரிடம் இராணுவத்தினர் கோரியுள்ளனர்.

இராணுவத்தினர் வசம் தற்போது, சுமார் 4,000 ஏக்கர் காணிகள் உள்ள நிலையில், அவற்றில் 1,000 ஏக்கரை தொடர்ந்து வைத்திருக்கவிருப்பதாக இராணுவம் கோரியுள்ளது.

அத்துடன், வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது' என மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள ஆயிரத்து 500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர முன்னர், மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிகளை இராணுவம் விடுவிக்கவுள்ளது.

முன்னதாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X