2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இராணுவத்தை வெளியேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும்

Niroshini   / 2016 மே 08 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கிலிருந்து இராணுவத்தை  வெளியேற்றுவதா அல்லது  வைத்திருப்பதா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்

கிளிநொச்சி  மாவட்ட  செயலாக்கத்தில் சனிக்கிழமை(07) இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில்  கலந்து  கொண்டதன் பின்னர்  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இந்த  இடத்தில்  இராணுவம்  இருக்கத் தேவையில்லை  அவர்களை  வைத்திருக்கவும்  தேவையில்லை என அடித்து  சொல்ல வேண்டியது  தமிழ்  மக்களினதும் தமிழ்பிரதிநிதிகளினதும் கடமையாகும்.

இன்றும் கூட கிளிநொச்சி கச்சேரியில் இருக்கின்ற  ஒரு பகுதியை  இராணுவம் சுவீகரித்து  வைத்திருப்பதை நாங்கள் அறிகின்றோம். அதேபோல், கிளிநொச்சியின் நகர பகுதியில் 40  சதவீதமான  காணிகள்  இராணுவத்தின் வசமே  உள்ளன.  எந்தவித  அபிவிருத்தி பணிகளையும்  செய்யவிடாது இந்த இராணுவம்தான்  இடங்களை பிடித்து வைத்திருக்கின்றது.

ஆகவே, இராணுவம்  வெளியேற்றப்பட வேண்டும்  என்பதில்  எந்தவித  மாற்றுக்கருத்துக்களும்  இல்லை. இதற்காக  போராடுவோம். இராணுவத்தை வெளியேற்றுவது  அரசாங்கத்தின் கடமையாகும்.

இதனை  செய்யத்தவறினால்  இது கூட  ஒரு  விபரீதமான  நிகழ்ச்சியாகவே நடந்து முடியும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X