2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இராணுவம் விடுவித்த காணியில் குண்டுகள் மீட்பு

George   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

'நாவற்குழி கிழக்கில் உள்ள காணியொன்றினுள் இருந்து இரண்டு குண்டுகள் இன்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன' என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னர் இராணுவ முகாமாக இருந்து விடுவிக்கப்பட்ட 3 ஏக்கர் காணியை துப்புரவு செய்யும் பணிகள் புதன்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, காணிக்குள் குண்டுகள் இருப்பது இனங்காணப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் உதவியுடன் குண்டுகளை மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட குண்டுகளை விசேட அதிரடிப் படையினர் இன்று மாலை செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X