2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இருவேறு மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர்கள் இருவரை, எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான், இன்று (27) உத்தரவிட்டார்.

மந்துவில் மேற்குப் பகுதியில்  செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேபோல், மிருசுவில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது ஷசெய்யப்பட்டிருந்தார்.

இவ்விருவரையும் நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் முற்படுத்திய போது, வழக்கினை விசாரணை செய்த நீதிவான், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X