Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 20 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் கனடா ரொறான்ரோ மாநகரத்துக்கும் இடையிலான “இரட்டை நகர உடன்படிக்கை”, யாழ்ப்பாணத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (20) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் சார்பில் வட மாகாண முதலமைச்சர், ரொறான்ரோ மாநகர முதல்வர் ஆகியோர் யாழ். பொது நூலகத்தில் வைத்து, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
முன்னதாக, கனேடிய ரொறான்ரோ மாநகரத்தின் மேயர் ஜோன் ரோறி உள்ளிட்ட கவுன்சில் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யாழ். மாநகர ஆணையாளர் வாகீசன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், யாழ். மாநகரத்துக்கு முதல்வர் ஒருவர் இல்லாத நிலையில், மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், வடமாகாண முதலமைச்சர் கையெழுத்திட்டிருந்தார்.
இதன் பின்னர், கனேடிய ரொறான்ரோ மாநகர மேயர், நினைவுச் சின்னங்களை வடமாகாண முதலமைச்சருக்கு கையளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வடமாகாண முதலமைச்சரும் நினைவுச் சின்னமொன்றை ரொறன்ரோ முதல்வருக்கு கையளித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago